உலகின் அதிவேக மீக் கணிப்பொறி (Super Computer) – Road Runner.

சூப்பர் கணினிகளை உருவாக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த அமெரிக்கா, சமீபத்தில் வினாடிக்கு 1000 ட்ரில்லியன் கணக்கீடுகளை நிகழ்த்தும் அரிய சூப்பர் கணினியை அறிமுகம் செய்துள்ளது.

லாஸ் அலமாஸ் தேசிய பரிசோதனைக் கூடமும், ஐ.பி.எம். நிறுவனமும் இணைந்து இந்தக் கணினியை உருவாக்கியுள்ளன. `ரோட் ரன்னர்' என்று அழைக்கப்படும் இந்த கணினி 100 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஐபிஎம் இதற்கு முன் உருவாக்கிய அதிவேக கணினியான ப்ளூ ஜீன் சிஸ்டத்தைக் காட்டிலும் இது, இருமடங்கு வேகமாக செயல்படும். இந்தக் கணினியை அணு ஆயுதப் பராமரிப்பு, மற்றும் அணுகுண்டு வெடிப்பு பிம்ப மாதிரிகளை உருவாக்க பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் அணு ஆயுதப் பராமரிப்பு பணி மட்டுமல்லாது இந்த கணினி சிவில் எஞ்சினியரிங், மருத்துவம், விஞ்ஞானம், இயற்கை எரிபொருள் உருவாக்கம், எரிபொருளை மிச்சப்படுத்தும் போக்குவரத்து வாகனங்களை வடிவமைத்தல், மருத்துவ சிகிச்சை, மற்றும் நிதித்துறை சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட பல பயன்பாடுகளுக்காகவும் இந்த சூப்பர் கணினியைப் பயன்படுத்தலாம் என்று அமெரிக்க தேசிய அணு பாதுகாப்பு நிர்வாக தலைவர் தாமஸ் அகஸ்டினோ தெரிவித்துள்ளார்.

இந்தக் கணினியின் வேகத்தை எளிதாக விளக்க வேண்டுமென்றால், 6 பில்லியன் மக்கள் 24 மணி நேரமும் தங்களது சொந்தக் கணினிகளில் செய்யும் வேலைகள் அனைத்தையும் இந்த ரோட் ரன்னர் சூப்பர் கணினி ஒரே நாளில் தனியாக செய்து முடித்து விடும்.

இந்தக் கணினியை உருவாக்க சுமார் 6 ஆண்டுகள் பல விஞ்ஞானிகள் மண்டையை உடைத்து இறுதியில் உருவாக்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கணினியை இணைக்கும் அமைப்பு 6000 சதுர அடி இடத்தை நிரப்பியுள்ளது. 5 லட்சம் பவுண்டுகள் எடையுள்ள 57 மைல்களுக்கு ஃபைபர் ஆப்டிகல் போடப்பட்டுள்ளது. இந்த கணினியில் 6948 டியூயெல் கோர் கணினி சிப்கள் உள்ளன. 12,960 செல் எஞ்சின்களுடன் 80 டெராபைட்டுகள் மெமரியைக் கொண்டுள்ளது.

சூப்பர் கணினிகள் இயங்கும் வேகத்தை "ஃப்ளாப்" என்று அழைப்பர். அதாவது ஃப்ளோட்டிங் பாயிண்ட் ஆபரேஷன்ஸ் (வினாடிக்கு) என்பதன் சுருக்கமே ஃபிளாப் ஆகும். இந்தக் கணினியின் செயல் திறன் வேகம் "பெட்டாஃபிளாப்" (Petaflop) என்று அழைக்கப்படுகிறது. அதாவது 1000 ட்ரில்லியன் செயல்களை ஒரு வினாடியில் நிகழ்த்த முடிவது என்பதைத்தான் "பெட்டாஃபிளாப்" என்று அழைக்கின்றனர்.

மே மாதம் 25-ம் தேதி இந்தக் கணினியை சோதனை செய்ததில் 1000 ட்ரில்லியன் பணிகளை சீராகவும் வெற்றிகரமாகவும் நிறைவேற்றியது இந்த ரோட் ரன்னர் கணினி.

இக் கணினியின் வடிவம்: (Configuration)

Architecture:

12,960 IBM PowerXCell 8i CPUs, 6,480 AMD Opteron dual-core processors, Infiniband, Linux

Power: 2.35 MW

Space: 296 racks, 560 m2 (6,000 sq ft)

Memory: 103.6 TiB

Speed: 1.71 petaflops (peak)

Cost: US$133M (Rs.6,65,00,00,000…)

1 comments:

vetrigee said...

very very useful
by vetrigee

Post a Comment