-
உங்கள் கணிணியிலில் ANTI VIRUS நிறுவப்பட்டுள்ளதா என்று தெரிந்துகொள்ளுங்கள். பிரபலமாக உபயோகத்தில் இருப்பது Norton, MaCafee, AVG, ClamWin, Kaspersky, போன்றவை. உங்கள் கணிணியில் மாறுபட்டு இருக்கவும் வாய்ப்பு உண்டு. சம்பந்தபட்ட Antivirus நிரலை அவ்வப்பொழுது புதுப்பித்து கொள்வது உசிதம்.
-
மின் அஞ்சலுடன் இணைந்து வந்து தரவிறக்கம் செய்யப்பட்ட எல்லாக் கோப்புகளையும் கணிணியில் நிறுவியிருக்கும் Anti Virus மூலம் ஒரு முறை சோதனை செய்த பிறகு உபயோகிப்பது நல்லது. கோப்பை Right- click செய்தால் scan with [ ANTI VIRUS ] என்று வரும். இதை தேர்வு செய்தால், குறிப்பிட்ட கோப்பை மட்டும் சோதனை செய்து சில நொடிகளில் அந்தக் கோப்பு பாதுகாப்பானது தானா இல்லையா என்று சொல்லிவிடும்.
-
Instant Messenger இல் பரிச்சயம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் சுட்டியை அல்லது கோப்பைப் பெறுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். பெரும்பாலான virus attack இப்படித் தான் பரவுகிறது. இதுமட்டுமல்லாது, இம்மாதிரியான தளங்கள் phising site ஆக இருக்கக்கூடும். அதாவது உங்களைக் குறித்த தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்க மட்டுமே அமைக்கப்பட்ட போலித் தளங்கள். இவை பெரும்பாலும் பிரபல வர்த்தகத் தளங்களைப் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும். உங்கள் வங்கிக் கணக்கு எண், Credit card password விவரங்களைத் தெரிவிக்குமாறு வலியுறுத்தும். பிறகு, நீங்கள் கொடுத்த தகவல்களை வைத்து சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் சாத்தியமே அதிகம். Phisihng குறித்த அதிகப்படி விவரங்கள் இனிவரும் பதிவுகளில் சொல்லப்படும்.
மேலே சொன்னவையெல்லாம் இனிமேல் நச்சுநிரல்களிடம் (virus) மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கான யோசனைகள். ஒருவேளை இவற்றையும் தாண்டி சில சாமர்த்தியமான virus கணிணியில் குடியேறிவிட்டால் அல்லது ஏற்கனவே ஏதாவது நச்சுநிரல் (virus) உங்கள் கணிணியிலே கூடுகட்டிக் குடித்தனம் பண்ணிக்கொண்டு இருந்தால் அதை எப்படிக் கண்டுபிடித்துச் சரி செய்வது? வாரம் ஒரு முறையாவது Anti virus நிரலை ஓடவிடவும். அந்த நேரத்திலே கணிணியை உபயோகிக்காமல் இருந்தால் எல்லாக் கோப்புகளும் முறையே சோதனை செய்யப்படும்.
ஒருவேளை உங்கள் கணிணியில் Anti Virus நிறுவவில்லை என்றாலோ கணிணியில் இருக்கும் Anti Virus ல் சோதனை செய்தால் மட்டும் போதாது என்று தோன்றினாலோ இணையத்திலிருந்தே உங்கள் கணிணியைச் சோதனைக்கு உட்படுத்தலாம். இந்தச் சேவையை http://housecall.trendmicro.com/ என்ற தளம் இலவசமாக வழங்குகிறது. இது virusஐ மட்டுமில்லாது Spyware, malware எனப்படும் தகவல் திருட்டுப் பணியில் ஈடுபடும் நிரல்களையும் கண்டுபிடித்துவிடும். இம்மாதிரியான உளவு வேலை செய்யும் நிரல்களைக் குறித்த விவரங்களும், அவற்றைத் தடுத்து எப்படி நம்மைப் பாதுகாத்துக்கொள்வது என்பதையும் வரும் பதிவுகளில் விவரமாகப் பார்க்கலாம்.
http://housecall.trendmicro.com/ என்ற தளம் இம்மாதிரியான Spyware – Malwaresஐக் கண்டறிந்து நீக்க உதவும். இந்தத் தளத்திற்குச் சென்று Get HouseCall Free Scanஐத் தேர்வு செய்யவும். பிறகு வரும் திரைகளில் சொல்லிய படி செய்தால் உங்கள் கணிணி முழுவதுமாகப் பரிசோதனை செய்யப்படும். நீங்கள் இந்தத் தளத்திலிருந்து உங்கள் கணிணியைச் சோதனைக்கு உட்படுத்தும் போது மற்றத் தளங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். இன்னும் சொல்லப்போனால் கணிணியை உபயோகிப்பதையே தவிர்க்கவும். முதல்முறை இதைச் செய்யும்போது சோதனைக்கான நேரம் அதிகமாகும் வாய்ப்பு உண்டு. எனவே நேரம் குறித்துக் கவலைப்படவேண்டாம்.
சோதனையின் முடிவில் உங்கள் கணிணியில் இருக்கும் கோப்புகளில் எத்தனை virusஆல் பாதிக்கப்பட்டுள்ளன, என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதும் உங்களுக்குச் சொல்லப்படும். ஆலோசனைப்படி முறையே அவற்றை நீக்கிவிட்டால் கணிணிப்பாதுகாப்புக்கு உண்டான முதல் கவசத்தைப் பெற்றுவிட்டதாகக் கருதுங்கள்.
- தீபா கோவிந்த்
நீங்கள் இந்தக் கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக உங்களிடம் மேசைக்கணிணியோ (Desktop) அல்லது மடிக்கணிணியோ (Laptop) இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் அது உங்களிடம் தான் இருக்கிறது என்று நம்புகிறீர்களா?
உத்தியோக நடவடிக்கைக்காக மட்டுமே தேவை என்றிருந்த கணிணி, இப்போது வீட்டிலும் ஓர் அத்தியாவசியத் தேவையாக மாறிக்கொண்டு வருகிறது. படிப்பு, பொழுதுபோக்கு, தகவல் சேகரிப்பு எனப் பல காரணங்களுக்காக இணையம் வாயிலாக கோப்புகள் தரவிறக்கம் செய்வதும் நாளுக்கு நாள் அதிகரித்துத்தான் வருகிறது. ஆனால் இப்படித் தரவிறக்கம் செய்யப்படும் கோப்புகள் மூலமாகவும், இதை அனுமதிக்கும் தளங்கள் மூலமாகவும் computer virus என சொல்லப்படும் நச்சு நிரல் நம் கணிணிக்குள் புகுந்து துவம்சம் பண்ணிவிடும் என்ற உண்மையை பலரும் படித்திருப்பீர்கள். இன்னும் சிலருக்குச் சொந்த அனுபவமாகக் கூட இருக்கலாம். இம்மாதிரி தரவிறக்கம் செய்ய அனுமதிக்கும் தளங்கள் எவ்வளவு பாதுகாப்பானவை என்று கண்டுபிடிப்பது நம் கையில் இல்லை.
புதிதாக வாங்கிய கணிணியில் இணையத் தொடர்பு கிடைத்தவுடன் முதலில் தரவிறக்கம் செய்து நிறுவப்படுவது, உடனுக்குடன் அரட்டையடிக்க உதவும் instant messenger தான். ( உதா : Yahoo Messenger, gTalk, MSN Messenger, Skype etc etc). இந்த மென்பொருட்களில் எந்தப் பிரச்னையும் இல்லை, ஆனால் இதன்வாயிலாக உங்கள் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதில் எச்சரிக்கை தேவை. காரணம், அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து வரும் கோப்புகள் மற்றும் சுட்டிகளால் உங்கள் கணிணி நச்சு நிரலால் பாதிப்படையும் சாத்தியம் மிகமிக அதிகம்.
பரந்து கிடக்கும் இணையத்தில், தளங்களின் பாதுகாப்புத் திறனை நம்மால் கணிக்க முடியாது. நாம் செல்லும் தளங்கள் எல்லாம் பாதுகாப்பானவை தானா என்ற ஆராய்ச்சியில் முனைந்துவிட்டால், தேடி வந்த விஷயம் காணாமல் போய்விடும், நடைமுறைக்கும் உதவாது. அப்படி என்றால், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது எப்படி?.
3 comments:
அய்யா, நீங்கள் சில தினங்கள் முன்பு பென் டிரைவ்வில் மால்வேர் நீக்கம் பற்றி எழுதியிருந்தீர்கள் அந்தப் பக்கம் காணப் படவில்லை page not available என்று வருகிறது.. அருள்கூர்ந்து அதைப் பற்றி விவரம் prabhabadri@rediffmail.com என்ற முகவரிக்குத் தெரிவிக்கவும் நன்றி.
எனது கட்டுரையை மீள்பதிவு செய்ததுக்கு நன்றி.
இது உங்கள் கவனத்தை கவர்ந்ததில் எனக்கு மகிழ்ச்சியே
நன்றி,
வணக்கம்,
தீபா கோவிந்த்
நல்ல பதிவு தீபா
ஈழநேசனில் பார்த்தேன்..
வாழ்த்துக்கள்..
Post a Comment