Showing posts with label மென்பொருள். Show all posts
Showing posts with label மென்பொருள். Show all posts

Windows XP – இப்போது தமிழில்…

Windows XP OS முழுவதும் இப்போது தமிழில் காண கிடைக்கிறது. மைக்ரோசாவ்ட் நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது.

Windows XP ® தமிழ் இடைமுக தயாரிப்பு என்ற பெயரில் மைக்ரோசாவ்ட் நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு படங்களை பார்க்கவும் (எனது கணினியில் இருந்து படம் பிடித்தவை…?)

Screen Capture

qwe

  aad

இவ்வாறு  அனைத்தும் தமிழில் மாற்ற இயலும். இந்த மென்பொருள் Microsoft.com இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய… இங்கே அழுத்தவும். அழுத்து.

அதே போல, Windows Vista-வுக்கும் தமிழ் எழுத்துருவாக்க மென்பொருள் உள்ளது. உங்கள் Operating System Vista-வாக இருந்தால் இங்கே அழுத்தழும்…. அழுத்து.

கணினியின் முகப்பு தோற்றத்தை மாற்ற 3D-Bump Top.

3D-Bump Top என்பது உங்கள் கணினியின் முகப்பு தோற்றம் (Desktop) –யை 3D View-ல் காண உதவும் மென்பொருள். இந்த மென்பொருள் மூலம் உங்களது கோப்புகளை 3D View-ல் காணமுடியும். புது விதமான தோற்றத்தை இது அளிக்கும்.

1

2 

3

 4

விளக்கமாக இதை பார்க்கவும்:

தேவையானவை:

* Processor: 1.8 GHz
* Memory: 1.0 GB
* Video: 128 MB
* Free Disk Space: 15MB
* Screen resolution: 800 � 600
* OpenGL 2.0
* Internet connection
* Windows XP/Vista/7

பதிவிறக்கம் செய்ய…

இணைப்பு

(குறிப்பு: இந்த மென்பொருளின் Full Version வேண்டுபவர்கள், பின்னூட்டத்தில் உங்கள் மெயில் முகவரியை தெரிவிக்கவும் + இந்த பதிவை பற்றி உங்கள் கருத்துக்களோடு….)

கம்ப்யூட்டரில் அனைத்தும் சரியாக இருக்கின்றதா?

கம்ப்யூட்டரில் பல வகையான ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன. ஹார்ட் டிஸ்க் மட்டும் நாம் அறிவோம். மதர் போர்டு என ஒன்று இருப்பதைப் பொதுவாகத் தெரிந்து கொண்டிருப்போம்.
இதனுடன் பல துணை சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கீ போர்டு, மவுஸ் போன்றவை பொதுவாக உள்ளவை. இவை எல்லாம் சரியாக உள்ளனவா? அல்லது பிரச்னையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றனவா ? திடீரென நம் காலை வாரிவிடுமா? என்பதை எப்படி அறிந்து கொள்வது? அல்லது அவை இயங்க வேண்டிய வேகத்தில் அதற்கான தன்மையுடன் இயங்குகின்றனவா? என்று எப்படித் தெரிந்து கொள்வது?
PC Wizard என்ற இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து இயக்கினால் இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும். உங்களுடைய கம்ப்யூட்டரின் பாகங்கள் மற்றும் அவற்றின் செயல் திறனை சிறிது ஆழமாகத் தெரிந்துகொள்ள இந்த புரோகிராம் பயன்படுகிறது. அவற்றின் செயல் திறன் பொதுவான இவற்றின் செயல் திறனுடன் ஒப்பிடுகையில் சரியாக உள்ளதா? என்பதனையும் அறியலாம். இதனை இன்ஸ்டால் செய்து இயக்கியவுடன் இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரை முழுமையாக ஸ்கேன் செய்திடும். பின் ஒவ்வொரு சாதனமும் எந்நிலையில் இயங்குகின்றன என்று தொழில் நுட்ப ரீதியில் தகவல் தரப்படும். எந்த சாதனங்கள் சரியில்லை என்று கண்டறிந்து இவற்றை எல்லாம் மாற்றிவிடுங்கள் என்று அட்வைஸ் தரும்.
அப்படியா சேதி! என்று இவற்றை எல்லாம் பார்த்த பிறகு அங்குள்ள Benchmarks என்ற பட்டனை அழுத்தவும். இது கீழாக இடது புறம் கொடுக்கப்பட்டுள்ளது. இது சாதனங்களுக்கான செயல்திறன் சோதனையை மேற்கொண்டு அதன் பொதுவான தன்மையுடன் ஒப்பிட்டு காட்டும். இவை மட்டுமல்லாது உங்கள் கம்ப்யூட்டர் குறித்த இன்னும் பல தகவல்களையும் சோதனைகளையும் மேற்கொள்ளலாம். பிசி விஸார்ட் புரோகிராமினை இயக்கிப் பார்த்து ரசித்துப் பாருங்கள்.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யுங்க…

ஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க…

  முதலில் பார்டிசன் என்றால் என்ன என்பதை பார்ப்போம். கணினியில் உள்ள ஹார்ட்டிஸ்க் பெரிய கொள்ளளவில் வரும் போது அதனை நம் வசதிக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் பல பகுதிகளாக பிரித்து கொள்ளலாம்.

அதுதான் பாடிசன் எனப்படுகிறது. புரியும் படி சொல்ல வேண்டுமெனில் கணினியில் ஹார்ட்டிஸ்க் 80GB அளவுள்ளதாக கொள்வோம். அதனை நம் பயன்பாட்டுக்கு C: - 20GB , D: - 30GB , E: - 30GB என்று வேண்டிய அளவுகளில் பிரித்து கொள்ளலாம். உபயோகிக்கும் போது C: - இயங்குதளம் , D: - மென்பொருள்கள் , E: - பாடல்கள் , வீடியோ என்று சேமித்து விருப்பப்படி உபயோகித்து கொள்ளலாம்.

பெரும்பாலும் இவை நீங்கள் கணினி வாங்கும் போதே செய்யப்பட்டு வந்து விடும். இதில் எனக்கு ஒரு பிரச்சினை தோன்றியது. C: -ல் 20GB மட்டும் இருந்ததால் நிறுவும் மென்பொருள்களால் நிறைந்து நாளடைவில் Disk is full என்று வந்து விட்டது. D: -ல் அதிகமான இடம் இருந்தாலும் அதனை C: -க்கு நகர்த்துவது கடினமான காரியம்.

இது போன்ற தருணங்களில் முன்பு FDISK எனும் DOS டூலை உபயோகித்து வந்தேன். மொத்த ஹார்ட்டிஸ்க்கையும் திரும்ப பிரித்து C: அதிகமாகவும் D: , E: அளவு குறைவாகவும் நிறுவ வேண்டி இருந்தது. இந்த டூலை உபயோகிக்கும் போது ஹார்ட்டிஸ்க்கில் இருந்த அனைத்து தகவல்களும் அழிந்து விடும். மீண்டும் format செய்து புதியது போல் இயங்குதளம் நிறுவி உபயோக படுத்த வேண்டி இருக்கும். :(

ஆனால் Easeus Partition Master மென்பொருளை அறிந்து கொண்ட பிறகு இந்த வேலை மிக எளிதாயிற்று. இதன் மூலம் எளிய வழி முறைகள் மூலம் பார்டிசன் அளவுகளை கூட்டலாம் / குறைக்கலாம். பார்டிசன்களை அப்படியே காப்பி செய்து கொள்ளலாம். புதிய பாடிசன்களை உருவாக்கலாம். பார்டிசன்களை நீக்கலாம். ஏற்கனவே உள்ள பார்டிசன்களை இரண்டாக பிரிக்கலாம். மேலும் பல வசதிகள் உள்ளன. பார்டிசன்களை Format செய்து கொள்ளலாம்.

இவை அனைத்தையும் உங்கள் ஹார்ட்டிஸ்கில் எவ்வித தகவல் இழப்பும் (Data Loss) இன்றி செய்ய முடியும். இந்த மென்பொருள் இல்ல பயனர்களுக்கு (Home Use) முற்றிலும் இலவசம். இதனை இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இது விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 இயங்குதளங்களில் இயங்கும்.

மேலும் ஸ்க்ரீன்ஷாட்கள் .இத்தனை உபயோகித்து உங்கள் ஹார்ட்டிஸ்க் பார்டிசன்களில் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து கொள்ளுங்கள். மாற்றங்கள் செய்த பின்பு மாற்றங்கள் சேமிக்கப்பட்டு உங்கள் கணினியை மீண்டும் துவக்க (Restart) சொல்லும். கணினி மீண்டும் துவங்க ஆரம்பிக்கும் போது நீங்கள் செய்த மாற்றங்கள் செயல்படுத்த படும்.

முக்கிய குறிப்பு : சோதித்து பார்க்கும் போது உங்கள் கணினியில் ஏதேனும் முக்கிய கோப்புகள் / தகவல்கள் இருந்தால் அவற்றை USB டிரைவிலோ, DVD யிலோ Backup எடுத்து கொள்ளவும். நீங்கள் தெரியாமல் ஏதேனும் தவறுகள் செய்ததால் தகவல்களை இழக்க நேரிடலாம்.

Wi-Fi தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள்!

    "ஒயர்லெஸ் ஃபிடெலிடி" என்ற தொழில் நுட்பம்தான் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)) என்று அழைக்கப்படும்நெட்வொர்க்குகளின் ஒரு சில வகைகள் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. அதாவது நெட்வொர்க்குகளுக்கும், கணினி, இணையதளஇணைப்புகளுக்குமான கம்பிவட தொழில் நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக இந்தகம்பியற்ற இணைப்புத் தொழில்நுட்பம் தற்போது வெகு வேகமாகபரவலாகிவருகிறது.
    முறையான பாதுகாப்பு, தடுப்பு ஏற்பாடுகள் இல்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கை யார் வேண்டுமானாலும் அனுமதியின்றி பயன்படுத்தி எந்தவிதமான நாசவேளைகளிலும் ஈடுபடலாம் என்பதே தற்போது எழுந்துள்ள அச்சம்.
    இந்தியா தற்போது தகவல் தொடர்பியலில் புரட்சியை எதிகொண்டு வருகிறது. மிகப்பெரிய செல்பேசி சந்தையாக இந்தியா வளர்ந்து வரும் நிலையில் இந்ததொழில் நுட்பமும் இந்தியாவில் அதிக வளர்ச்சியை பெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
    இந்திய வர்த்தகத் துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், இதனால் மக்கள்வாழ்முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றால் கணினிகள், லேப்டாப்கள், அடுத்த தலைமுறை அதி தொழில் நுட்ப ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும்பிற கைவழி பயன்பாட்டு மின்னணுக் கருவிகளின் தேவை கணிசமாக பெருகிவருகிறது. இதனுடன் சேர்ந்து 24 மணி நேர இணைப்புச் சேவை, பரவலானவிரிவலை (பேண்ட்வித்) ஆகியவற்றிற்குமான தேவைகளும் கூடி வருகிறது.
    இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுக்ககூடிய ஒரு தொழில் நுட்பமான Wi-Fi தொழில்நுட்பம் தற்போது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வீடுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில்விரும்பத்தகுந்த ஒரு இணைப்புத் தொழில்நுட்பமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
    இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கிய Wi-Fi அலையன்ஸ் நிறுவனத்தின்கணிப்பின்படி தற்போது Wi-Fi தொழில் நுட்பத்திற்கான இந்திய சந்தை 270 மில்லியன் டாலர்கள். 2011-12ஆம் ஆண்டுவாக்கில் இது 900 மில்லியன் டாலர்கள்சந்தையாக வளர்ச்சியடையும்.
    ஆனால்... இந்த தொழில் நுட்பம் பல பாதுகாப்பு கவலைகளையும், அச்சுறுத்தல்களையும் அளிக்க துவங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்து விசாரணை மேற்கொள்கையில், பாதுகாப்பு நிறுவனங்கள், இதற்கு காரணமான ஒரு மின்னஞ்சலை கண்டுபிடித்துள்ளது. அதனை பின்பற்றிச்செல்கையில் கென் ஹேவுட் என்ற அமெரிக்க குடிமகனின் கணினிக்குஇட்டுச் சென்றுள்ளது.
    அதாவது அந்த அமெரிக்கக் குடிமகனின் கணினி ஹேக் செய்யப்பட்டு அதன்வழியாக இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இந்த தொழில் நுட்பம்நம்மிடையே சில கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
    அதாவது சரியாக கண்காணிக்கவில்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கில் உள்ளகுறைபாடுகளினால் ஹேக்கர்கள் எந்த ஒரு கணினி நெட்வொர்க்கிலும் புகுந்துநாச வேலைகளில் ஈடுபடமுடியும். இதனால் இதன் பயனாளர்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய கட்டாயம் பிறந்துள்ளது .
    இதற்காக, வெள்ளை அறிக்கை ஒன்றையும் மஹிந்திரா ஸ்பெசல் சர்வீசஸ்குழுமம் (MSSG) வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்: "சிறப்பான பாதுகாப்பு செயல்முறைகள் - Wi-Fi -யின் அபாயங்கள் என்று அந்தவெள்ளை அறிக்கை தலைப்பிடப்பட்டுள்ளது.
    Wi-Fi தொழில் நுட்பத்தினால் இணையதளம் உள்ளிட்ட இணைப்புகளில்நடந்துள்ள புரட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் வீடுகள் வரை அதன் மீது ஈர்ப்பை அதிகரித்துள்ளது. அதன் பயனும், திறனும் மற்ற கம்பிவட இணைப்பு நெட்வொர்க்குகளை விட அதிகமானது. ஆனால் இது எவ்வளவு பயனுள்ளதோ அந்த அளவிற்கு பாதுகாப்பு அபாயங்கள் நிறைந்தது. எனவே இந்த குறிப்புகள் சிறந்த தடுப்பு உத்திகளை மேற்கொள்ள பயனுள்ளதாக அமையும்.
    கம்பியற்ற இணைப்பு உங்கள் நெட்வொர்க்கை அடைய ஒரு பின்வாசல் வழி!
    ஒயர்லெஸ் ஆக்சஸ் கார்டுகளின் மூலம் இயங்கும் லேப் டாப்கள், தானியங்கி இணைப்பு அமைப்புகள் ஆகியவை தற்போது பெருகி வருகிறது. அதாவது ஒயர்லெஸ் இணைப்பு பெற்றுள்ளவர்கள் தகவல்களை வான்வழியாக அனுப்புவதால், அதனை ஹேக் செய்வது சுலபம், அதாவது யார்வேன்டுமானாலும் அதனை பார்க்க முடியும். இதானல் ஹேக்கர்கள் எங்கிருந்தபடி வேண்டுமானாலும் நிறுவனங்களின் நெட்வொர்க்குகள் மட்டுமல்லாது ஒரு நாட்டின் பாதுகாப்பை தீர்மானிக்கும் ராணுவ சம்பந்தமான விஷயங்களையும் தகவல்களையும் வெளியிலிருந்தே அணுக முடியும்.
    என்ன தவறு ஏற்பட முடியும்?
    எதேச்சையாக அணுகுதல், அதாவது இதில் ஒரு பயனாளர் அடுத்ததாக உள்ளஒரு நிறுவனத்தின் ஊடுருவும் ஒயர்லெஸ் நெட்வொர்க் மூலம் ஒயர்லெஸ்அணுகல் புள்ளியைக் கைப்பற்றி அங்கிருந்து தகவல்களை திருடி என்னவேண்டுமானாலும் செய்யலாம்.
    கெட்ட நோக்கத்துடன் அணுகுதல், இதில், ஹேக்கர்கள் ஒரு பொய்யானஅணுகல் இடங்களிலிருந்து தாங்கள் உருவாக்கிய ஒயர்லெஸ் கருவிகள் மூலம்எந்த ஒரு நெட்வொர்க்கையும் ஆட்கொண்டு, அதன் வழி செல்லும் தகவல்களைதிருடுவது.
    தற்காலிக நெட்வொர்க்குகள், இதில் ஒயர்லெஸ் கணினிகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்துவது, அதாவது ஒயர்லெஸ் அணுகல் இடம் என்ற ஒன்றுஇல்லாமலேயே.
    உங்கள் ஒயர்லெஸ் அணுகல் புள்ளி ஒரு குறிப்பிட்ட பகுதியை பரவலாகக்கொண்டு இயங்குவதால் நீங்கள் ஒயர் மூலம் அனுப்பும் செய்திகள் மற்றும்கார்ப்பரேட் தரவுகளை (datas) தொலைதூரத்திலிருந்தே அணுக முடிவது.
    இதனைத் தடுக்க உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
  • ஒயர்லெஸ் கருவி அட்மினிஸ்ட்ரேட்டர் தான்தோன்றி கடவுச்சொல்லைஉடனடியாக மாற்றவும். உதாரணமாக ரீ செட் 123 அல்லது அது போன்ற பிறபொதுவான கடவுச்சொல் தானாகவே உங்கள் கணினியில் இருந்தால் அதனைஉடனடியாக மாற்றி வேறு கடவுச்சொல்லை வைக்கவும்.
  • உங்கள் ஒயர்லெஸ் கருவி பயன்படுத்தக்கூடிய WPA/WEP பாதுகாப்புகுறியேற்றங்களை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும்.
  • பயனில் இல்லாத போது Wi-Fi மீடியாவின் இயக்கத்தை நிறுத்தி வைப்பது நல்லது. அல்லது பிளக்கை பிடிங்கி வைப்பதும் சிறந்தது.
  • MAC முகவரி வடிக்கட்டி அமைப்பை ஏற்படுத்தி அதிகாரபூர்வ கருவிகளுக்குமட்டுமே இணைப்பை அனுமதிக்கவும்.
  • தானாகவே உள்ள சர்வீஸ் செட் ஐடென்டிஃபையர் (எஸ்.எஸ்.ஐ.டி.)ஐ உடனடியாகமாற்றவும்.
  • தேவையில்லை என்றால் எஸ்.எஸ்.ஐ.டி. ஒலிபரப்புகளை நிறுத்தி விடுங்கள்.
  • திறந்த Wi-Fi நெட்வொர்க்குகளை தானாகவே இணைக்கும் அமைப்பின்இயக்கத்தை நிறுத்தி வைக்கவேண்டும்.
  • உங்கள் ஒயர்லெஸ் பாதைகள் அனைத்திலும் ஃப்யர்வால்களை (Firewalls) உருவாக்கவும்.
  • உங்கள் வளாகத்தின் மையப்பகுதியில் உங்கள் ஒயர்லெஸ் அணுகள் இடத்தைவையுங்கள். சுவற்றிலோ மூலைகளிலோ வைத்தால் கசிவுகள் ஏற்படும்.
    இந்த குறிப்புகள், தனிப்பட்ட பயனர்களுக்கு ஓரளவிற்கு பொருந்தகூடியது. நிறுவனஙளும், அமைப்புகளும் இதனை பரந்துபட்ட அளவில்மேற்கொள்ளவேண்டியிருக்கும். ஒரே படித்தான பாதுகாப்பு முறைகளை இவைகடைபிடிக்க வேண்டும்.
    என்ன தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தாலும், அதனை உடைத்து உள் நுழையும்தொழில் நுட்பத்தை இந்த தொழில் நுட்பங்களிலிருந்தே கண்டுபிடித்துவிடமுடிகிறது என்பதே இதன் மையப் பிரச்சனை. என்று தணியும் இந்தவலைப்பின்னல் பாதுகாப்பு தாகம்?

இணையம் வழியாக பல கணினிகளை இயக்க உதவும் மென்பொருள் – டீம் வியுவர் (Team Viwer 4)

teamviewer5 teamviewer TeamViewer1
இணையம் வழியாக, பல கணினிகளை ஒரு கணினி (Computer) மூலம் பார்க்க முடியும். கோப்புகளை காப்பி செய்ய முடியும். உங்கள் கணினி போலவே உபயோகிக்க முடியும். மிக எளிய வழியில் (Options) இந்த மென்பொருளை உபயோகிக்கலாம். மிகவும் உபயோகமானது. எடுத்துக்காட்டாக: நீங்கள் உங்கள் அலுவலகத்தில் இருந்து கொண்டு, உங்கள் வீட்டில் உள்ள கணினியை இயக்கலாம். உங்கள் வீட்டு கணினியின் முகப்பு தோற்றம், உங்கள் அலுவலக கணினியில் பார்க்கலாம். கோப்புகளை காப்பி செய்யலாம். அலுவலகத்தில் இருந்து கொண்டு உங்கள் வீட்டு கணினியை நீங்கள் விரும்பியவாறே இயக்கலாம். இதற்கு தேவை இரு கணினியிலும் இண்டெர் நெட் (internet) இணைப்பு வேண்டும்.

பதிவிறக்கம் செய்ய…

இணைப்பு.

குறிப்பு:

Full Version வேண்டுவோர்கள், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்…

பிடிஎப்(PDF) To வேர்ட்(Word) மாற்றி உங்களுக்காக…

நண்பர்களே நாம் பிடிஎப் பார்மெட்டில் ஒரு கோப்பு வைத்திருப்போம் அதில் சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் அத்துடன் ஒரு படமும் இணைக்க வேண்டும் எனில் அதை வேர்ட் கோப்பாக மாற்ற வேண்டும். இப்பொழுது வருகிற அனத்து பிடிஎப்பிலிருந்து வேர்ட்க்கு மாற்றும் கன்வெர்ட்டர்கள் அனைத்தும் காசு கொடுத்து வாங்கியாக வேண்டும். அப்படி இல்லைஎன்றால் இலவச பதிப்பு தரவிறக்கி பயன்படுத்தினால் வெறும் 2 அல்லது 3 பக்கங்கள் மட்டுமே வேர்டுக்கு மாற்றித் தரும் அதனால் நமக்கு பயன் ஏதும் இல்லை.  ஆனால் AnyBizSoft நிறுவனத்தினர் சட்டரீதியாக அனைவருக்கும் பிடிஎப்லிருந்து வேர்டுக்கும் மாற்றிக் கொடுக்கும் மென்பொருளை தருகிறார்கள்.  நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று உங்களுடைய சரியான மின்னஞ்சல் முகவரி தரவேண்டியது. 

முதலில் இந்த தளத்திற்கு செல்லுங்கள் சுட்டி

பின்னர் கீழே உள்ள படத்தில் உள்ளபடி சிகப்பு வண்ணம் அம்பு பிரகாரம் முதலில் மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.

பின்னர் பச்சை அம்பு உள்ள Get KeyCode என்ற பொத்தானை தேர்வு செய்தால் கீழே உள்ள படம் போல் உங்களுக்கு இணையத்தளம் கிடைக்கும்.  அதில் முதலில் மின்னஞ்சல் முகவரி பின்னர் உங்கள் பெயர் கொடுத்தால் போதும் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இந்த மென்பொருளின் Key கொடுத்துவிடுவார்கள்.

இந்த மென்பொருளை நிறுவிய பிறகு இந்த Key கொண்டு நீங்கள் ரெஜிஸ்டர் செய்தால் போதுமானது.

பின்னூட்டங்களில் உங்கள் கருத்தினை பகிர்ந்து கொள்ளவும்.

வேகமாக கோப்புகளை காப்பி செய்யும் டெராகாப்பியின் Full Version.

பொறுத்தார் பூமியாள்வார் என்பார்கள். கணினியை பொறுத்தவரை நம் பொறுமையை சோதிக்கும் பல விஷயங்கள் நடக்கும். அதில் ஒன்று மிகப்பெரிய கோப்புகளையோ, போல்டெர்கலையோ காப்பி செய்யும் போது மிக குறைவான வேகம் மற்றும் பல இடையூறுகள்.
அதிக கோப்புகள் உள்ள பெரிய போல்டெர்களை காப்பி செய்யும் போது இடையில் ஏதாவது பிழை செய்தி தந்து விட்டு காப்பி செய்வது நின்று விடும். எந்த கோப்பு வரை காப்பி ஆனது எது காப்பி ஆகவில்லை என்ற குழப்பம் நேரிடும். மீண்டும் அந்த ஒட்டு மொத்த போல்டரயுமே காப்பி செய்ய வேண்டும். காப்பி செய்யும் போது நேரக்கூடிய மிக குறைவான வேகம் எரிச்சலை தரும்.
விண்டோஸ் இயங்குதளத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு தரும் விதம் ஒரு மென்பொருள் உள்ளது. TeraCopy - இங்கே கிளிக் செய்து இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இனி நீங்கள் காப்பி செய்து பேஸ்ட் செய்யும் போது இந்த மென்பொருள் தானாக இயங்க ஆரம்பிக்கும்.

இந்த மென்பொருளின் சிறப்பம்சங்கள் :
1. துரிதமாக காப்பி வேலையை செய்து முடிக்கும்.
2. காப்பி செய்து கொண்டிருக்கும் போது அதனை "Pause" செய்து வைத்து கொண்டு பின்பு "Resume" செய்து காப்பி வேலையை தொடரலாம்.
3. காப்பி செய்து கொண்டு இருக்கும் போது , ஒரு குறிப்பிட்ட கோப்பு காப்பி செய்வதில் இடையூறு ஏற்பட்டால் அந்த கோப்பை விட்டு விட்டு மற்ற கோப்புகளை காப்பி செய்யும். ஒட்டு மொத்த காப்பி வேலையையும் தடை செய்து விடாது.
4. இடையூறு ஏற்பட்ட கோப்புகளின் பட்டியலை காண்பிக்கும். அந்த கோப்புகளை நீங்கள் சரி செய்து பின்பு காப்பி செய்து கொள்ளலாம்.
உபயோகித்து பாருங்கள். இந்த மென்பொருள் தேவை இல்லை என்றால் Start --> Programs --> Teracopy --> Uninstall Teracopy செய்து விட்டு பழைய காப்பி முறையை பெற்று கொள்ளுங்கள்.

டெரா காப்பியின் Full Version-யை பெற இங்கே கிளிக் செய்யவும்.

பதிவிறக்கம் செய்ய…

இணைப்பு.

 

அதிவேகமாக பதிவிறக்கம் செய்ய… – ஒரு மென்பொருள்.

 
View Full AlbumInlineRepresentation2068b596-b099-426b-b7cb-5d78a94b6199[3]
இந்த மென்பொருள் மூலம், மிக வேகமான பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளை பயன்படுத்தி அனைத்து விதமான File-களையும், அதாவது Video, Audio, Documents, Pictures போண்ற அனைத்தையும், மிக வேகமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சாதாரணமாக நீங்கள் பதிவிறக்கம் செய்வதை காட்டிலும், இந்த மென்பொருள் மூலம் நாண்கு மடங்கு வேகமான பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
மேலும்.,
Youtube-ல் இருந்து நேரடியாக Video-களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
Pause செய்து கொள்ளும் வசதி.
வரிசையாக (Q) பதிவிறக்கம் செய்து கொள்ள உதவும் வசதி.
மேலும் சந்தேகங்களுக்கு:
பதிவிறக்கம் செய்ய…
இணைப்பு
குறிப்பு:
இப்போதைக்கு Trial version கொடுத்துள்ளேன். இது ஒரு மாதம் வேலை செய்யும். Full version வேண்டும் என்பவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

பதிவிறக்கம் செய்ய…
இணைப்பு
குறிப்பு:
இப்போதைக்கு Trial version கொடுத்துள்ளேன். இது ஒரு மாதம் வேலை செய்யும். Full version வேண்டும் என்பவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

பதிவிறக்கம் செய்ய…
இணைப்பு
குறிப்பு:
இப்போதைக்கு Trial version கொடுத்துள்ளேன். இது ஒரு மாதம் வேலை செய்யும். Full version வேண்டும் என்பவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.