Showing posts with label gmail. Show all posts
Showing posts with label gmail. Show all posts

கூகுள் மெயில் ஷார்ட் கட் கீஸ்

image

நம்மில் பெரும்பான்மையோர் பயன்படுத்துவது கூகுள் மெயில் அக்கவுண்ட் தான். இதில் உள்ள கீ போர்டு ஷார்ட் கட் கீ தொகுப்புகள் இதன் பயன்பாட்டை வேகப்படுத்தும். இது நம் வேலையைக் குறைப்பதுடன் இன்டர்நெட் பயன்படுத்துவதனையும் குறைத்து அதன் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் அல்லவா?

இதோ சில ஷார்ட் கட் கீகள்:

Shift+I:இமெயில் மெசேஜைப் படித்ததாக குறியீடு செய்வதற்கு

Shift+u:இமெயில் மெசேஜைப் படிக்காததாகக் குறியிட

Z: முந்தைய செயல்பாட்டை கேன்சல் செய்திட

?:கீ போர்டு ஷார்ட்கட் கீகள் குறித்த உதவிக் குறிப்புகளைக் காட்ட

c: புதிய இமெயில் மெசேஜ் ஒன்றை எழுதிட

/ : சர்ச் பாக்ஸில் உங்கள் கர்சரை நகர்த்த

u: உங்களுடைய இமெயில் அக்கவுண்ட்டை ரெப்ரெஷ் செய்து லேட்டஸ்ட்டாக வந்த இமெயில் மெசேஜைக் காண

!: இமெயில் மெசேஜ் ஒன்றை ஸ்பாம் மெயிலாகக் குறியிட

p:தற்போதைய மெயிலுக்கு முன் உள்ள மெயிலுக்குச் செல்ல

. : வெறும் புள்ளி அடித்தால் கூடுதலான ஆப்ஷன்ஸ் காட்டப்படும்

r:மெயிலை அனுப்பியவருக்கு பதில் அனுப்ப

a:அனைத்து மெயில் பெற்றவருக்கும் பதில் அனுப்ப

Ctrl+c:அப்போதைய இமெயிலை ட்ராப்டாக சேவ் செய்திட

Esc:கர்சரை தற்போதைய பீல்டிலிருந்து நகர்த்தும்.

ஜஸ்ட் எப் கீயை மட்டும் அழுத்தினால் இமெயில் செய்தியை அடுத்ததற்கு பார்வேர்ட் செய்திட முடியும்.