Showing posts with label Windows Xp. Show all posts
Showing posts with label Windows Xp. Show all posts

கணினியின் முகப்பு தோற்றத்தை மாற்ற 3D-Bump Top.

3D-Bump Top என்பது உங்கள் கணினியின் முகப்பு தோற்றம் (Desktop) –யை 3D View-ல் காண உதவும் மென்பொருள். இந்த மென்பொருள் மூலம் உங்களது கோப்புகளை 3D View-ல் காணமுடியும். புது விதமான தோற்றத்தை இது அளிக்கும்.

1

2 

3

 4

விளக்கமாக இதை பார்க்கவும்:

தேவையானவை:

* Processor: 1.8 GHz
* Memory: 1.0 GB
* Video: 128 MB
* Free Disk Space: 15MB
* Screen resolution: 800 � 600
* OpenGL 2.0
* Internet connection
* Windows XP/Vista/7

பதிவிறக்கம் செய்ய…

இணைப்பு

(குறிப்பு: இந்த மென்பொருளின் Full Version வேண்டுபவர்கள், பின்னூட்டத்தில் உங்கள் மெயில் முகவரியை தெரிவிக்கவும் + இந்த பதிவை பற்றி உங்கள் கருத்துக்களோடு….)

ட்ரைவ் ஒன்றை மறைப்பது எப்படி?

new6
முக்கியமான தகவல்களை ஏனையோர் அணுகாமல் பாதுகாக்க விரும்புவோர்க்கு இது மிகவும் பயனுள்ள ஒரு குறிப்பு விண்டோஸ் இயங்கு தளத்தில் போல்டர்களை மறைத்து (Hide) வைக்கும் முறையை நீங்கள் அறிந்திருக்கலாம். போல்டர்களை மறைத்து வைப்பது போன்று கணினியிலுள்ள டரைவ்களையும் மறைத்து வைக்க முடியும். விண்டோஸில் இயங்கு தளம் மூலம் கணினியிலுள்ள எந்த ஒரு ட்ரைவையும் அடுத்த பயனர்களின் பார்வையிலிருந்து மறைத்து விடலாம். இதன் மூலம் உங்கள் அந்தரங்க தகவல்களுக்கு ஒரு பாதுகாப்புக கிடைக்கிறது. ஒரே நேரத்தில் எல்லா ட்ரைவ்களையுமோ அல்லது குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரமோ மறைத்து வைக்கலாம். அதற்கு நீங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் சிறிய மாற்றத்தைச் செய்து விட்டால் போதுமானது.
முதலில் விண்டோஸில் அட்மினிஸ்ட்ரேட்டராக லொக்-ஓன் செய்து கொள்ளுங்கள். அடுத்து ரன் (Run) பொக்ஸில் regedit என டைப் செய்து ஓகே சொல்லுங்கள். திறக்கும் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவில் கீழே காட்டப்பட்டுள்ள இடத்தை அணுகுங்கள்.
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion \Policies\Explorer
இங்கு இறுதியாக Explorer ல் க்ளிக் செய்யுங்கள். அடுத்து விண்டோவின் வலப்புறம் ரைட் க்ளிக் செய்து புதிதாக NoDrives எனும் பெயரில் DWORD பெறுனமானத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். கணினியிலுள்ள ட்ரைவ் அனைத்தையும் மறைப்பதாயின் அதன் Value Data வாக 3FFFFFF எனும் பெறுமானத்தை வழங்குங்கள்.
அதேபோன்று குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரம் மறைப்பதாயின் அதாவது A, B, C, D, E, F, G, H என ஆங்கில் எழுத்துக்கள் மூலம் குறிக்கப்படும் ட்ரைவ்களை மறைக்க 2, 4, 8, 16, 32, 64, 128 எனும் ஒழுங்கில் வழங்குங்கள். உதாரணமாக F ட்ரைவை மறைத்து வைக்க வேண்டுமாயின் 32 எனும் இலக்கத்தை Value Data வாக வழங்க வேண்டும்.
அடுத்து ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவை மூடி விட்டு கணினியை மறுபடி இயக்க நீங்கள் மறைத்து வைத்த ட்ரைவை மை கம்பியூடர் விண்டோவில் பார்க்க முடியாது. மீண்டும் அதனைக் காண்பிக்க வேண்டுமானால் மேற் சொன்ன இதே வழியில் சென்று புதிதாக உருவாக்கிய DWORD பெறுமானத்தை அழித்து விட்டு கணினியை மறுபடி இயக்க வேண்டும்.

விண்டோஸ் (Windows Xp) install செய்ய உதவும் கையேடு.

xpnew18

விண்டோஸ் OS-யை install செய்வது குறித்து அனைத்து சந்தேகங்களையும், தீர்க்க உதவும் கேயேடு. இந்த கையேடுகளில் அனைத்து விளக்கங்களூம், புரியும்படி தெளிவாக, படங்களுடன் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

படித்து பார்த்து விட்டு சொல்லவும்.

பதிவிறக்கம் செய்ய…

இணைப்பு.

Windows XP install செய்ய கற்றுக்கொள்ளுங்கள்…

கணினி வைரஸ், ட்ரோஜன் போன்றவைகளால் பாதிக்கப்படும் போது,  கணினியின் இயங்கு தளத்தை (operating system) மறுமுறை நிறுவ (install) வேண்டியதிருக்கும்.
கணினி வைத்திருப்போர் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய விஷயங்களில், Windows XP நிறுவும் முறையும் ஒன்று.     பலருக்கும் Windows XP நிறுவும் வழிமுறை  தெரிந்திருக்கும்.  இருப்பினும், கணினியை  பார்மட் (format) செய்து மறுமுறை நிறுவும் போது,  தகவல்கள் அழிந்து விடுமோ,  கணினி செயலிழந்து போய் விடுமோ என்ற பயம் இருக்கும்.
கணினி வைத்திருப்போருக்கும்,  ஹார்ட்வேர் தொழிலில் இருக்கும் புதியவர்களுக்கும் "Windows XP setup Simulator" என்ற அருமையான,  பயனுள்ள மென்பொருள் உள்ளது.   ஒரு கணினியை பார்மட் செய்து, windows xp-ஐ நிறுவும் போது எப்படி கணினி செயல்படுமோ,  அதே அமைப்பை இந்த மென்பொருள் ஏற்படுத்தித் தரும்.  ஆகையால், எந்த வித பயமும் இன்றி, நீங்கள் நன்றாக பயிற்சி பெறும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும்  விண்டோஸை நிறுவுலாம், நீக்கலாம்.
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய, http://getitfreely.co.cc/xp செல்லவும்.
குறிப்பு:  ESC கீயைத் தட்டி எப்போது வேண்டுமானாலும்,  இந்த மென்பொருளில் இருந்து வெளியேறலாம்.  இதனால் கணினிக்கு எந்த பாதிப்பும் வராது.