பிடிஎப்(PDF) To வேர்ட்(Word) மாற்றி உங்களுக்காக…

நண்பர்களே நாம் பிடிஎப் பார்மெட்டில் ஒரு கோப்பு வைத்திருப்போம் அதில் சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் அத்துடன் ஒரு படமும் இணைக்க வேண்டும் எனில் அதை வேர்ட் கோப்பாக மாற்ற வேண்டும். இப்பொழுது வருகிற அனத்து பிடிஎப்பிலிருந்து வேர்ட்க்கு மாற்றும் கன்வெர்ட்டர்கள் அனைத்தும் காசு கொடுத்து வாங்கியாக வேண்டும். அப்படி இல்லைஎன்றால் இலவச பதிப்பு தரவிறக்கி பயன்படுத்தினால் வெறும் 2 அல்லது 3 பக்கங்கள் மட்டுமே வேர்டுக்கு மாற்றித் தரும் அதனால் நமக்கு பயன் ஏதும் இல்லை.  ஆனால் AnyBizSoft நிறுவனத்தினர் சட்டரீதியாக அனைவருக்கும் பிடிஎப்லிருந்து வேர்டுக்கும் மாற்றிக் கொடுக்கும் மென்பொருளை தருகிறார்கள்.  நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று உங்களுடைய சரியான மின்னஞ்சல் முகவரி தரவேண்டியது. 

முதலில் இந்த தளத்திற்கு செல்லுங்கள் சுட்டி

பின்னர் கீழே உள்ள படத்தில் உள்ளபடி சிகப்பு வண்ணம் அம்பு பிரகாரம் முதலில் மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.

பின்னர் பச்சை அம்பு உள்ள Get KeyCode என்ற பொத்தானை தேர்வு செய்தால் கீழே உள்ள படம் போல் உங்களுக்கு இணையத்தளம் கிடைக்கும்.  அதில் முதலில் மின்னஞ்சல் முகவரி பின்னர் உங்கள் பெயர் கொடுத்தால் போதும் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இந்த மென்பொருளின் Key கொடுத்துவிடுவார்கள்.

இந்த மென்பொருளை நிறுவிய பிறகு இந்த Key கொண்டு நீங்கள் ரெஜிஸ்டர் செய்தால் போதுமானது.

பின்னூட்டங்களில் உங்கள் கருத்தினை பகிர்ந்து கொள்ளவும்.

3 comments:

சென்ஷி said...

பகிர்விற்கு நன்றி நண்பரே! மிகவும் உபயோகமான சுட்டி..

மு.இரா said...

வருகை தந்தமைக்கு நன்றி

முனைவர் சே.கல்பனா said...

பயனுள்ள தகவல்.

Post a Comment